Advertisment

மாஸ்க் அணிந்து மக்களிடம் ரிவ்யூ கேட்ட பிரபல நடிகர்

Akshay Kumar wearing a mask and asking public review of Housefull 5

பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் தருண் மன்சுஹானி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹவுஸ்ஃபுல் 5’. சஜித் நதியாத்வாலா தயாரித்துள்ள இப்படத்தில் அபிஷேக் பச்சன், ரித்தேஷ் தேஷ்முக், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோனம் பஜ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் 2010-ல் வெளியான பட ஹவுஸ்புல் படத்தின் ஐந்தாம் பாகமாக உருவாகியுள்ளது.

Advertisment

இப்படம் கடந்த 6ஆம் தேதி வெளியானது. 2 கிளைமாக்ஸுடன் இரண்டு வெர்ஷனாக இப்படம் வெளியாகியிருந்தது. ‘ஹவுஸ்புல் 5 ஏ’ என்ற பெயரில் ஒரு வெர்ஷனும் ‘ஹவுஸ்புல் 5 பி’ என இன்னொரு வெர்ஷனும் தனித்தனியாக வெளியிடப்பட்டிருந்தது. இந்த புது முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனமே கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் அக்‌ஷய் குமார் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில், வெளியே நின்று கொண்டு படம் பார்த்து வெளியே வரும் பார்வையாளர்களிடம் மைக்கை நீட்டி ரிவ்யூ கேட்டுள்ளார். ஆனால், தான் யார் என்று தெரியாதபடி படத்தில் இடம்பெற்ற மாஸ்கை முகத்தில் அணிந்திருந்தார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

Bollywood akshay kumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe