இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹைவான் என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படம் தொடர்பான புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

Advertisment

இந்த நிலையில், ஹைவான் படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் இருவரும் மீண்டும் ஒரே படத்தில் இணைந்துள்ளனர். ஹைவான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் தங்களது சமூக வலைத்தள பதிவுகளில் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளனர். 

பிரியதர்ஷன் இயக்கும் ஹைவான் திரைப்படம் மட்டுமின்றி தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா அதிகம் எதிர்பார்க்கப்படும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதியின் ஜனநாயகன், யஷ் நடிக்கும் டாக்சிக் மற்றும் கேடி ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறார். ஹைவான் திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் சார்பில் வெங்கட் கே நாராயணா மற்றும் ஷைலஜா தேசாய் ஃபென் இணைந்து தயாரிக்கின்றனர்.