Advertisment

‘அமேசானில் காட்டு தீ...நம்மால் அது சாத்தியமில்லை’- அக்‌ஷய் குமார் வருத்தம்

பிரேசிலின் அமேசான் மழைக் காடுகள் கடந்த மூன்று வாரங்களாக கடுமையான காட்டுத் தீயினால் மிக மோசமான அழிவை சந்தித்து வருகின்றது. இந்த சம்பவம் உலக அளவில் இயற்கை ஆர்வலர்களிடமும், விஞ்ஞானிகளிடமும் பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

akshay kumar

பொருளாதார முன்னேற்றத்திற்காக புதிய தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும் என கூறி ஏற்கனவே பிரேசில் அரசு கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமா மழைக்காடுகளை அழித்து வருகிறது. இதனை எதிர்த்து அங்குள்ள பூர்வகுடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 வாரங்களாக கடுமையான காட்டுத்தீ, வனப்பகுதி முழுவதையும் அழித்து வருகிறது.

Advertisment

உலகின் தேவைக்கான ஆக்சிஜனில் 20 சதவீத அளவை இந்த அமேசான் காடுகள் தான் உற்பத்தி செய்கின்றன. கடந்த ஆகஸ்ட் 15 க்கு பிறகு மட்டும் 9,000க்கும் அதிகமான தீ விபத்துகள் அங்கு ஏற்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 80% அதிகமாகும். அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்துகள் பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக நாம் மேற்கொண்டுள்ள போராட்டத்துக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டரில் பலரும் பிரே ஃபார் அமேசான் என்று ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் பல்வேறு பிரபலங்கள் இந்த காட்டு தீ குறித்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அக்‌ஷய் குமார், “2 வாரங்களுக்கு மேலாக அமேசான் காடுகளில் பற்றி எறியும் தீயின் புகைப்படங்களை பார்க்கும்போது மிகுந்த மன வேதனையாகவும், அச்சமூட்டும் வகையிலும் இருக்கிறது. இந்த காடுகள்தான் 20% ஆக்ஸிஜனை வழங்குகின்றன. இது நம்மில் ஒவ்வொருவரையும் பாதிக்கும். பூமி காலநிலை மாற்றத்தைத் தக்கவைக்கக்கூடும். ஆனால், நம்மால் அது சாத்தியமில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

akshaykumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe