Skip to main content

‘அமேசானில் காட்டு தீ...நம்மால் அது சாத்தியமில்லை’- அக்‌ஷய் குமார் வருத்தம்

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

பிரேசிலின் அமேசான் மழைக் காடுகள் கடந்த மூன்று வாரங்களாக கடுமையான காட்டுத் தீயினால் மிக மோசமான அழிவை சந்தித்து வருகின்றது. இந்த சம்பவம் உலக அளவில் இயற்கை ஆர்வலர்களிடமும், விஞ்ஞானிகளிடமும் பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 

akshay kumar

 

 

பொருளாதார முன்னேற்றத்திற்காக புதிய தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும் என கூறி ஏற்கனவே பிரேசில் அரசு கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமா மழைக்காடுகளை அழித்து வருகிறது. இதனை எதிர்த்து அங்குள்ள பூர்வகுடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 வாரங்களாக கடுமையான காட்டுத்தீ, வனப்பகுதி முழுவதையும் அழித்து வருகிறது.
 
உலகின் தேவைக்கான ஆக்சிஜனில் 20 சதவீத அளவை இந்த அமேசான் காடுகள் தான் உற்பத்தி செய்கின்றன. கடந்த ஆகஸ்ட் 15 க்கு பிறகு மட்டும் 9,000க்கும் அதிகமான தீ விபத்துகள் அங்கு ஏற்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 80% அதிகமாகும். அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்துகள் பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக நாம் மேற்கொண்டுள்ள போராட்டத்துக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
 
ட்விட்டரில் பலரும் பிரே ஃபார் அமேசான் என்று ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

உலகம் முழுவதும் பல்வேறு பிரபலங்கள் இந்த காட்டு தீ குறித்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அக்‌ஷய் குமார், “2 வாரங்களுக்கு மேலாக அமேசான் காடுகளில் பற்றி எறியும் தீயின் புகைப்படங்களை பார்க்கும்போது மிகுந்த மன வேதனையாகவும், அச்சமூட்டும் வகையிலும் இருக்கிறது. இந்த காடுகள்தான் 20% ஆக்ஸிஜனை வழங்குகின்றன. இது நம்மில் ஒவ்வொருவரையும் பாதிக்கும். பூமி காலநிலை மாற்றத்தைத் தக்கவைக்கக்கூடும். ஆனால், நம்மால் அது சாத்தியமில்லை” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மன்னித்து விடுங்கள், இனி அப்படி நடக்காது" -  நடிகர் அக்ஷய் குமார் வருத்தம்  

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

Akshay Kumar apologises to fans after pan masala brand advertisement

 

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். இவர் சமீபத்தில் தனியார் நிறுவனத்தின் பான்மசாலா விளம்பரத்தில் நடித்திருந்தார். இவருடன் இந்த விளம்பரத்தில் அஜய் தேவ்கனும், ஷாருக்கானுக்கு நடித்திருந்தனர். ஆனால் அக்ஷய் குமார் நடித்தது  மட்டும் பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, சமூக வலைத்தளங்களில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இதற்கு கரணம் என்னவென்றால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகையிலை தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என அக்ஷய் குமார் கூறியிருந்தார். ஆனால் அதனை மீறி இந்த பான் மலசல விளம்பரத்தில் நடித்ததால் நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் அக்ஷய் குமார் இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், என்னை மன்னித்து விடுங்கள். இனி வரும் காலங்களில்  இப்படிப்பட்ட விளம்பரத்தில் நடிக்க மாட்டேன். உங்களின் உணர்வுகளை பாதிப்பதால் பான்மசாலா விளம்பரத்தில் இருந்து பின் வாங்குகிறேன்.  இதில் கிடைத்த ஊதியத்தை நலத்திட்டங்களுக்கு செலவிடுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக அல்லு அர்ஜுன் புகையிலை விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என கூறி பலரின் பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

“இப்போது எங்களுக்கு அக்‌ஷய் குமார் கடவுளாகியிருக்கிறார்”- ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

நடன இயக்குனராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கி தற்போது பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அக்‌ஷய் குமாரை வைத்து  ‘லக்‌ஷ்மி பாம்’ என்றொரு படத்தை இயக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். 
 

akshay kumar

 

 

தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் காஞ்சனா. இந்த திரைப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர, காஞ்சனா 3 பாகம் வரை வெளியாகி வெற்றிகரமாக ஓடியுள்ளது. 

இந்நிலையில் ‘காஞ்சனா’ படத்தை ஹிந்தியில் அக்‌ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கின்றார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்நிலையில் லாரன்ஸின் ட்ரஸ்ட் தொடங்கப்பட்டு 15 வருடங்கள் ஆகின்றது. இதை கொண்டாடும் வகையில் திருநங்கைகளுக்கு என இல்லம் கட்ட திட்டமிட்டுள்ளார்கள். இதுகுறித்து லக்‌ஷ்மி பாம் ஷூட்டிங்கில் அக்‌ஷய் குமாரிடம் தெரிவித்தபோது உடனடியாக 1.5 கோடி நிதியை உதவியாக கொடுத்திருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ். 

மேலும் அந்த பதிவில், “உதவி செய்பவர்கள் அனைவரையுமே நான் கடவுளாக நினைப்பேன். இப்போது எங்களுக்கு அக்‌ஷய் குமார் கடவுளாகியிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார் லார்ன்ஸ்.