ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி காந்த் மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான படம் 2.0. இந்த படம் ரூ.540 கோடி செலவில் பிரமாண்டமாக, ஹாலிவுட்டில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியிலும் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் ரஜினி, வசீகரன், சிட்டி, 2.0 என்று கலக்கியுள்ளார். அதேபோல பார்வையாளர்கள் அனைவருக்கும் சர்பரைஸாக 3.0 என்று புதுவிதத்தில் ஒரு ரோபோ வருகிறது. அந்த ரோபோ வருகையில் தியேட்டரில் விசில் பரக்கிறது. 3.0 மொபைல் போன் அளவில் இருக்கும் ரோபோ அது. இந்த விஷயத்தை சர்பரைஸாகவே இறுதி வரை வைத்திருந்தது படக்குழு. 2.0 படத்தில் முக்கிய காட்சியில் வரும் இந்த 3.0 ரோபோ வீடியோ ஒன்றை அக்ஷய் குமார் தனது ட்விட்டரி பக்கத்தில் பதிவிட்டு, படம் பார்க்காதவர்களுக்கு சர்பரைஸை உடைத்திருக்கிறார்.