Advertisment

"நான் சம்பாதித்தது இந்தியாவில் தான்" - கனடா நாட்டு குடியுரிமை குறித்து அக்‌ஷய் குமார்

Akshay Kumar to renounce Canadian passport

Advertisment

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், இந்தி மற்றும் மராத்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கனடா நட்டு குடியுரிமையைப் பெற்றிருந்தார். இதற்கு அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார். தான் கனடா நாட்டு குடியுரிமையை எடுத்துக் கொண்டதற்கான காரணம் தெரியாமல் மக்கள் விமர்சனம் செய்வது வருத்தமளிக்கிறது என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "இந்தியாதான் எனக்கு எல்லாமே. நான் சம்பாதித்ததெல்லாம் இங்கிருந்துதான். அவர்களுக்கெல்லாம் நான் திரும்பக் கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் பாஸ்போர்ட் மாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளேன்.

முன்னதாக என் படங்கள் சரியாக போகவில்லை. அதனால் வேலை செய்ய வேண்டும் என நினைத்து வேலை நிமித்தமாக கனடா சென்றேன். அப்போது என் நண்பன் கனடாவில் இருந்தான்.அவன் அங்கு வர சொன்னதால்விண்ணப்பித்து சென்றேன். அந்த சமயத்தில் எனக்கு இரண்டு படங்கள் ரிலீஸாகாமல் இருந்தன.பின்பு வெளியாகி இரண்டுமே சூப்பர் ஹிட் ஆனது. உடனே என் நண்பன் திரும்பிப் போமீண்டும் வேலையைத் தொடங்கு என்றான்.

Advertisment

இங்கு வந்தவுடன் இன்னும் சில படங்கள் கிடைத்தன. தொடர்ந்து படங்களின் பணிகளில் பிஸியாகி விட்டேன். பாஸ்போர்ட் வைத்திருந்ததை மறந்துவிட்டேன். ஆனால் பாஸ்போர்ட்டை மாற்றவேண்டும் என ஒருபோதும் நினைத்ததில்லை. இப்போது மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். அதற்காக விண்ணப்பித்துள்ளேன்" என்றார்.

Canada Passport akshay kumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe