
‘முண்டாசுப்பட்டி’ படத்தை தொடர்ந்து ராம்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘ராட்சசன்’. இப்படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்த இந்தப் படத்தை ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. பெரிய விளம்பரங்களின்றி வெளியான இப்படம், பார்வையாளர்களைக் கவர்ந்து வேர்ட் ஆஃப் மவுத்தின் மூலம் வெற்றிகரமாக ஓடியது. தமிழை அடுத்து தெலுங்கு மொழியில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில், இப்படம் தற்போது ஹிந்தியிலும் ரீமேக் ஆகிறது. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தை தயாரித்து நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்துக்கு 'மிஷன் சிண்ட்ரெல்லா' என பெயரிடப்பட்டுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அக்ஷய்குமார் ஏற்கனவே தமிழில் வெற்றிபெற்ற 'காஞ்சனா' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)