Advertisment

விலை உயர்ந்த பொருளை பரிசாக தனது மனைவிக்கு அளித்த அக்‌ஷய் குமார்!

இந்தியா முழுவதும் வெங்காய விலை உச்சத்தை தொட்டுக்கொண்டு போகிறது. அதை கண்டிக்கும் வகியிலும் கலாய்க்கும் வகையிலும் பலர் திருமண பரிசாக வெங்காயத்தை கொடுப்பது, வெங்காயத்தை மாலையாய் கோர்த்து அணிந்துகொள்வது என்று பல விஷயங்களை செய்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

akshay kumar

இந்நிலையில், அக்‌ஷய்குமார் பங்கேற்ற ஹிந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், கரீனா கபூருக்கு வெங்காயத்தில் காதணி செய்யப்பட்டது தரப்பட்டுள்ளது. அதை கரீனா கபூர் பெரிதாக விரும்பவில்லை. இதனால் அதை கரீனா கபூரிடம் கேட்டு வாங்கிக்கொண்டு தனது மனைவிக்கு பரிசாக அளித்துள்ளார் அக்‌ஷய் குமார்.

Advertisment

இதுகுறித்து அக்‌ஷய் குமாரின் மனைவியும் நடிகையுமான டிவிங்கிள் கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘எனது கணவர் எனக்காக இந்தப் பரிசை வாங்கி வந்துள்ளார். முதலில் கபில் ஷர்மா நிகழ்ச்சியில் கரீனாவுக்கு வழங்கப்பட்ட இந்தக் காதணியை அவர் பெரிதும் விரும்பவில்லை போல. எனக்குப் பிடிக்கும் என நினைத்து இதை அக்‌ஷய் வாங்கி வந்துள்ளார். சில நேரங்களில் சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்கள் மனதை கவரலாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவிற்கு கீழ் பலரும் அக்‌ஷய் குமார் தனது மனைவிக்கு மிகவும் விலை உயர்ந்த பொருளை பரிசாக வழங்கியிருக்கிறார் என்று வெங்காய விலை உயர்வை கலாய்க்கும் வகையில் தெரிவித்து வருகின்றனர்.

onion price hike akshaykumar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe