மும்பையில் சைபர் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மூத்த காவல்துறை அதிகாரிகள், பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் ராணி முகர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் குழந்தைகளுக்கான 'சைபர் யோத்தா' என்ற காமிக் புத்தகத்தை வெளியிட்டனர்.

Advertisment

நிகழ்ச்சியில் அக்‌ஷய் குமார் தனது மகளுக்கு நடந்த மோசமான அனுபவத்தை பற்றி பகிர்ந்தார். அவர் பேசியதாவது, “சில மாதங்களுக்கு முன்பு என் வீட்டில் ஒரு சிறிய சம்பவம் நடந்தது. என் மகள் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். வீடியோ கேமில் சில வீடியோ கேம் அறிமுகம் இல்லாத யாருடன் வேண்டுமானாலும் விளையாடலாம். அப்படி விளையாடும் போது அந்த அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து சில சமயங்களில் மெசேஜ்கள் வரும். அப்படி என் மகள் விளையாடிக்கொண்டிருக்கும் போது மெசேஜ் வந்தது. அதில் நீங்கள் ஆணா பெண்ணா என கேட்கப்பட்டிருந்தது. அதற்கு என் மகள் பெண் என ரிப்ளை செய்திருந்தாள். 

Advertisment

பின்பு உடனே உன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்ப முடியுமா என அடுத்த மெசேஜ் வந்தது. என்னுடைய மகள் கேமை நிறுத்திவிட்டு என் மனைவியிடம் போய் சொல்லியிருக்கிறாள். இதுவும் சைபர் க்ரைமில் வரும் ஒரு பகுதிதான். அதனால் மாநில முதல்வருக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நம் மாநிலத்தில் எல்லா வாரத்திலும் ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சைபர் க்ரைம் குறித்து ஒரு விழிப்புணர்வு கிளாஸ் இருக்க வேண்டும். இந்த குற்றம் பெரிதாகி வருகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.