Advertisment

பா.ரஞ்சித் பட விபத்தின் எதிரொலி; அக்‌ஷய் குமார் எடுத்த அதிரடி முடிவு

337

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கெத்து தினேஷ், ஆர்யா நடிப்பில் ‘வேட்டுவம்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணி, வேளாங்கண்ணி, வேதாரண்யம் மற்றும் விழுந்தமாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. அந்த வகையில் விழுந்தம்பாடி கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி நடந்த படப்பிடிப்பில் கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது காரை இயக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் எஸ். மோகன்ராஜ், எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.  

Advertisment

இந்த உயிரிழப்பு சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்போரை பதைபதைக்க வைத்தது. இந்த விபத்து தொடர்பாக பா.ரஞ்சித் உட்பட நான்கு பேர் மீது அலட்சியமாக செயல்பட்டது உட்பட 3 பிரிவுகளின் கீழ் நாகை மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஸ்டன்ட் மாஸ்டர் எஸ்.மோகன்ராஜின் உடலுக்கு ஆர்யா, பா.ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர். பின்பு பா.ரஞ்சித்தின் தரப்பில் சம்பவம் குறித்து விள்ளக்கமளிக்கப்பட்டது. அதில் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும் மோகன்ராஜ் உயிர் பிரிந்துவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், ஸ்டண்ட் கலைஞர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஆண்கள், பெண்கள் என 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்துள்ளார். இதன் மூலம் படப்பிடிப்பு தளத்திலோ அல்லது வெளியிலோ காயம் ஏற்பட்டால் ரூ.5 முதல் ரூ 5.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. 

stunt master akshay kumar pa.ranjith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe