akshay kumar gets injured while shooting for Bade Miyan Chhote Miyan in Scotland

Advertisment

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அக்‌ஷய் குமார், தற்போது சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் 'காப்ஸ்யூல் கில்', 'ஓ மை காட் 2' உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் சூரரைப்போற்று வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே 'படே மியான் சோட்டே மியான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்க, சோனாக்‌ஷி சின்ஹா, ​​பிருத்விராஜ்மற்றும்டைகர் ஷெராப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இந்தியாவில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது.

அப்போது அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இடையே நடக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக அக்‌ஷய் குமாருக்கு அடிபட்டுமுழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்பு முதலுதவி செய்து சரிப்படுத்தியுள்ளனர். பெரிய காயங்கள் இல்லை என்றும், ஆனால் சண்டை சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனால் படப்பிடிப்பு நின்றுவிட்டதாக பேச்சுக்கள் எழுந்த நிலையில் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பது போல் சண்டைக்காட்சிகளுக்கு அக்‌ஷய் குமார் ரெஸ்ட் எடுக்கும் சமயத்தில் அவருக்கான க்ளோஸ் அப் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். இதனால் படப்பிடிப்பில் எந்த தாமதமும் ஏற்பட வாய்ப்பில்லை என படக்குழு தரப்பு கூறியதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.