கரோனா வைரஸ் தொற்று உலகையே நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸானது தற்போது உலகம் முழுக்க 210 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் இந்த கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/EVJmaQPVAAAA0V6.jpg)
இதனால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடியை அக்ஷய் குமார் சமீபத்தில் அளித்திருந்த நிலையில் தற்போது மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், முகக் கவசங்கள், வேகப் பரிசோதனைக் கருவிகள் ஆகியவற்றின் உற்பத்திக்காக மும்பை மாநகராட்சிக்கு நடிகர் அக்ஷய் குமார் ரூ.3 கோடி நிதி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூகவலைத்தளத்தில் கூறும்போது...
''பெயர் அக்ஷய்குமார், நகரம் மும்பை, நான் மற்றும் என்னைச் சார்ந்தவர்களின் சார்பாக, மும்பையின் காவல்துறை, மாநகராட்சி பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வ அமைப்புகள், தன்னார்வலர்கள், அரசாங்க ஊழியர்கள், வீட்டுக் காவலுக்கு இருப்பவர்கள் என அனைவருக்கும் இதயத்திலிருந்து நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)