Advertisment

தன் மேல் தீ வைத்துகொண்ட அக்‌ஷய் குமார்... (வீடியோ)

akshay kumar

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்ததன் மூலம் தமிழர்களிடமும் பிரபலமானார். இவர் முறையாக தற்காப்புக் கலை பயின்றவர் என்பதால் படங்களில் வரும் சண்டைக் காட்சிகள் எவ்வளவு ஆபத்தாக இருந்தாலும், தானாகவே முன்வந்து டூப் இல்லாமல் செய்வார்.

Advertisment

இந்த மாதம் இவர் நடித்த கேஸரி என்னும் படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில், அமேசான் பிரைம் ஒரிஜனலில் த்ரில்லர் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார் அக்‌ஷய். இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் யாரும் இதுவரை இணையதளங்களில் மட்டும் வெளியாகும் சீரிஸில் நடிக்க முன் வரவில்லை ஆனால் அக்‌ஷய் முன் வந்திருக்கிறார். ‘தி எண்ட்’என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த சீரிஸ் க்ரமை த்ரில்லர் ஜானரில் எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், செய்வாய்க்கிழமை இரவு இந்த வெப் சீரிஸுக்கான நடந்த புரோமோஷனில் அகஷய் குமார், தன் உடம்பில் நெறுப்பு வைத்து நடந்துவந்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். பின்னர், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் செம வைரலானது. இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த அக்‌ஷய் குமார், என் உடல் மேல் தீ வைத்துக்கொண்டேன், என்னை நம்புங்கள் இது ஆரம்பம்தான் என்று பதிவிட்டிருந்தார். அமேசான் ப்ரைம், இந்த புரோமோஷன் முழுக்க முழுக்க பயிற்சி பெற்ற சண்டை நிபுனர்களை வைத்து செய்துள்ளோம் வீட்டில் யாரும் செய்து பார்க்காதீர்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

akshaykumar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe