man vs wild

Advertisment

மிகவும் பிரபலமான டிவி நிகழ்ச்சிகளில் ஒன்று “மேன் வெர்சஸ் வைல்ட்”. பியர் க்ரில்ஸ் காட்டிற்குள் தனியாளாக சென்று, காட்டிற்குள் மனிதன் எப்படி பாதுகாத்துகொண்டு வெளியேறலாம் என்பதை மக்களுக்கு சொல்லும் நிகழ்ச்சிதான் இது.

இந்த நிகழ்ச்சியில் பியர் க்ரில்ஸுடன் பல நாட்டு பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர். இதுவரை அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

தற்போது பாலிவுட் நடிகர் அக் ஷய் குமாருடன் இணைந்து மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது.

Advertisment

அண்மையில் பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சிக்காக மைசூருவிலுள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது என்று சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.