/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/335_2.jpg)
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். இவர் சமீபத்தில் தனியார் நிறுவனத்தின் பான்மசாலா விளம்பரத்தில் நடித்திருந்தார். இவருடன் இந்த விளம்பரத்தில் அஜய் தேவ்கனும், ஷாருக்கானுக்கு நடித்திருந்தனர். ஆனால் அக்ஷய் குமார் நடித்தது மட்டும் பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, சமூக வலைத்தளங்களில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இதற்கு கரணம்என்னவென்றால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகையிலை தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என அக்ஷய் குமார் கூறியிருந்தார். ஆனால் அதனைமீறி இந்த பான் மலசலவிளம்பரத்தில் நடித்ததால் நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அக்ஷய் குமார் இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், என்னை மன்னித்து விடுங்கள். இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட விளம்பரத்தில் நடிக்க மாட்டேன். உங்களின் உணர்வுகளை பாதிப்பதால் பான்மசாலா விளம்பரத்தில் இருந்து பின் வாங்குகிறேன். இதில் கிடைத்த ஊதியத்தை நலத்திட்டங்களுக்கு செலவிடுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அல்லு அர்ஜுன் புகையிலை விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்என கூறி பலரின் பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)