Advertisment

“தினசரி கோமியம் குடித்து வருகிறேன்”- பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமார்

akshay kumar

மிகவும் பிரபலமான டிவி நிகழ்ச்சிகளில் ஒன்று “மேன் வெர்சஸ் வைல்ட்”. பியர் க்ரில்ஸ் காட்டிற்குள் தனியாளாக சென்று, காட்டிற்குள் மனிதன் எப்படி பாதுகாத்துக்கொண்டு வெளியேறலாம் என்பதை மக்களுக்கு சொல்லும் நிகழ்ச்சிதான் இது. தற்போது அதேபோல இன் டூ தி வைல்ட் என்று ஒரு நிகழ்ச்சியை பிரபலங்களுடன் தொகுத்து வழங்குகிறார் பியர் க்ரில்ஸ்.

Advertisment

பியர் க்ரில்ஸுடன் பல நாட்டு பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர். இதுவரை அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

தற்போது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து இன் டூ தி வைல்ட் நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது. அண்மையில் பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சிக்காக மைசூருவிலுள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது என்று சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோவில் அக்‌ஷய் குமார் யானையின் சானத்தை சூடாக்கி பியர் க்ரில்ஸுடன் குடிப்பதுபோல கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று பியர் க்ரில்ஸ் மற்றும் அக்‌ஷய் குமார் இன்ஸ்டாகிராமில் லைவில் கலந்துரையாடினர். அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த அக்‌ஷய்குமாரிடம் ரசிகர் ஒருவர், எப்படி யானை சாணத்தை குடிக்க ஒப்புக்கொண்டீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்தவர், “எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் சில உடல்நிலை காரணத்திற்காகவும்,ஆயுர்வேத காரணத்திற்காகவும்கோமியத்தை தினசரி குடித்து வருகிறேன்” என்று தெரிவித்து ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

akshay kumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe