style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
'விவேகம்' படத்தில் நடித்த அக்ஷராஹாசனின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் கசிந்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது இதுகுறித்து பேசிய நடிகை அக்ஷரா, அந்த புகைப்படங்கள் ஒரு குறும்படத்திற்காக எடுக்கப்பட்டவை என்றும் அதனை வேண்டாதவர்கள் யாரோ வேண்டுமேன்றே இணையத்தில் வெளியிட்டதாகவும் கூறியிருந்தார். மேலும் இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசிடம் புகாரும் அளித்திருந்தார். இந்த புகைப்படங்களை யார் வெளியிட்டிருப்பார்கள் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகை அக்ஷராஹாசனின் முன்னாள் காதலரான தனுஜ் விர்மானி என்பவரிடம் தற்போது விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விசாரணையில், தனுஜ் இதுகுறித்து பேசியபோது...."என்னிடம் அக்ஷராஹாசனின் அந்தரங்க புகைப்படம் இருந்தது உண்மை தான். நாங்கள் இருவரும் நான்கு வருடங்களாக டேட்டிங் செய்து வருகிறோம். ஆனால், அவர் கடந்த 2013ஆம் ஆண்டு அந்த படங்களை எனக்கு அனுப்பினார். அதனை நான் என் கைப்பேசியிலிருந்து அழித்துவிட்டேன். அக்ஷராஹாசனின் அந்தரங்க புகைப்படம் வெளியானதற்கும் எனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை" என்று கூறியுள்ளார். மேலும் தனுஜ் விர்மானி நடிகை ரதி அக்னிகோத்தாரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.