akshara reddy

விஜய் தொலைக்காட்சி நடத்தும் "வில்லா டூ வில்லேஜ்" என்று நிகழ்ச்சியின் பிரபலம் ஆன அக்ஷரா ரெட்டி இந்த நிகழ்ச்சி குறித்து பேசியபோது... "இந்த நிகழ்ச்சி நேரடியாக கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சி. நம் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாயில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் ஒன் லைன். என் டெடிகேஷனை பார்த்து "மஹாலஷ்மி" விருதை எனக்கு கொடுத்தார்கள். இந்த நிகழ்ச்சி எனக்கு மாடலிங் பொண்ணுகளும் கிராமத்திற்கு போய் வாழ முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்தது. நான் பொதுவாக உடற்பயிற்சியின் மீது பெரும் காதல் கொண்டவள், தினமும் இரண்டு மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்வதால் அந்த நிகழ்ச்சியை எளிமையாக கடக்க முடிந்தது" என்றார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் இவர் ரன்னர் அப், பெஸ்ட் ஆல் ரவுண்டர், அழகான முகம் ஆகிய அவார்ட்டுகளை பெற்றார். மேலும் தற்போது விஜீத் ஜோடியாக இவர் நடித்த "ஹேப்பி நியூ இயர்" குறும்படத்தை இதுவரை நான்கு மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதையடுத்து சபதம் விஷன்ஸ் சார்பாக, பிரான்ஸிஸ் செல்வம் இயக்கும் படத்தில் விஜீத் ஜோடியாக தமிழ் மற்றும் மலேசிய படத்தில் இவர் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு ஜக்குபாய் படத்திற்கு இசையமைத்த ரபீக் இசையமைக்கிறார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் மொரீஷியஸ் மற்றும் மலேசியாவில் நடக்கிறது. முதல் முறையாக தமிழ் படத்தின் படப்பிடிப்பை மொரீஷியஸ் அதிபர் பெர்லன் வையாபுரி தொடங்கி வைத்த முதல் படம் இதுதான்.