Advertisment

அக்‌ஷரா ஹாசன் பகிர்ந்த எச்சரிக்கை பதிவு

akshara haasan warned fans about fraudster

அமிதாப் பச்சன், தனுஷ் நடிப்பில் இந்தியில் வெளியான ‘ஷமிதாப்’ படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் கமலின் மகள் அக்‌ஷரா ஹாசன். தமிழில் அஜித் நடித்த விவேகம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து 'கடாரம் கொண்டான்', 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதையடுத்து விஜய் ஆண்டனியின் அக்னிச் சிறகுகள் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

Advertisment

இந்த நிலையில் அக்‌ஷரா ஹாசன், தன் பெயரை ஒருவர் தவறாக பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இப்ராஹிம் அக்தர் என்ற நபர் எனது பெயரையும் எனது குடும்பப் பெயரையும் தவறாகப் பயன்படுத்தி, ஊட்டியில் உள்ள ஒரு அலுவலகத்தில் இருந்து நாங்கள் சில புராஜெக்டுகளை தயாரிப்பதாகவும் செயல்படுத்துவதாகவும் சொல்கிறார். அவர் சொல்வது முற்றிலும் பொய்யானவை. எங்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

Advertisment

இந்த விஷயத்தை சரிசெய்யத் தேவையான சட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள். அந்த நபருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாதீர்கள்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

akshara haasan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe