அமிதாப் பச்சன், தனுஷ் நடிப்பில் இந்தியில் வெளியான ‘ஷமிதாப்’ படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் கமலின் மகள் அக்ஷரா ஹாசன். தமிழில் அஜித் நடித்த விவேகம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து 'கடாரம் கொண்டான்', 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதையடுத்து விஜய் ஆண்டனியின் அக்னிச்சிறகுகள் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
இந்த நிலையில், அக்ஷரா ஹாசன் மும்பையில் ஒரு சொகுசு வீடு வாங்கியுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. அங்கு கர் பகுதியில் ஒரு சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் 2,245 சதுர அளவில் ஒரு வீட்டை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வீடு மொத்தம் 15.27 கோடி ரூபாய் எனச் சொல்லப்படும் நிலையில் 13வது தளத்தில் அவர் வீடு அமைந்துள்ளதாம்.