Advertisment

விதிமீறிய நாகர்ஜூனா; அதிரடி நடவடிக்கை எடுத்த ஹைதராபாத் மாநகராட்சி

Akkineni Nagarjuna's convention center razed for encroaching lake in Hyderabad

Advertisment

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமை (HYDRAA) என்கிற அமைப்பு கடந்த ஜூலை 17-ல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு நீர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளதாக வரும் புகாரின் அடிப்படையில் அக்கட்டடத்தை இடித்து வருகிறது.

அந்த வகையில் பிரபல நடிகர் நாகர்ஜூனா தம்மிடிகுண்டா ஏரிக்கு அருகில் மிகப்பிரம்மாண்டமாகக் கட்டியுள்ள கன்வென்ஷன் சென்டர், கிட்டத்தட்ட 4 ஏக்கர் பரப்பளவில் ஏரியை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாகவும், மழை பெய்யும் போது மழை நீர் வடிகால் தடைபட்டு அப்பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதன் பேரில் தற்போது ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள், பலத்த போலீஸ் பாதுகாப்போடு ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அந்த கட்டடத்தை இடித்துள்ளனர்.

Akkineni Nagarjuna's convention center razed for encroaching lake in Hyderabad

Advertisment

நாகர்ஜூனா கட்டிய கன்வென்ஷன் சென்டர் பல கோடி ரூபாயில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது. அப்பகுதியில் பெரும் அடையாளமாகக் காணப்பட்ட அந்த கட்டடம் தற்போது இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. நாகர்ஜூனா தற்போது தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

hyderabad nagarjuna
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe