Advertisment

ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு வரிசையில் இணைந்த 'ஆகாஷ் வாணி'... இணையத்தில் கவனம் ஈர்க்கும் டீசர் 

Akash vaani teaser goes viral

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த கவின், ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனையடுத்து, வினீத் வரப்பிரசாத்இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான லிப்ட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் ஈநாக்அபில்இயக்கத்தில் ஆகாஷ் வாணி என்ற இணைய தொடரில் கவின் நடித்துள்ளார்.இதில், கவினுக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் ரெபா மோனிக்கா ஜான் நடிக்கிறார். சரத் ரவி, தீபக் பரமேஷ், அபிதா வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக்கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சமீபத்தில்வெளியான இத்தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிய நிலையில் நேற்றுடீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல் காமெடி ஜானரில் உருவாகவுள்ள இந்த தொடரின் டீசர்பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Akash Vaani kavin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe