Advertisment

'ஏகே 61' - அஜித்துடன் இணையும் இளம் நடிகர்

AK61'; Young actor to team up with Ajith

'வலிமை' படத்தை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'ஏகே 61' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் மஞ்சு வாரியர் உறுதி செய்துள்ளார். இதனிடையே ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் 'ஏகே 61' படத்தில் நடிகர் வீரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரா, 2015-ல் வெளியான 'ராஜதந்திரம்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'நடுநிசி நாய்கள்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதனை தொடர்ந்து 'ஏகே 61' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வீரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

ACTOR AJITHKUMAR Ajith 61 Boney kapoor h.vinoth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe