எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.இதனைத்தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்காக 20 கிலோவிற்குமேல் உடல்எடையை குறைத்துள்ளார்.இப்படத்தில் மோகன் லால் அல்லது நாகார்ஜூனாஇருவரில் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், இவர்களுடன் பாலிவுட் நடிகை தபுவும் மற்றும்பிக்பாஸ் புகழ் கவின் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
'ஏகே 61' படத்திற்காகஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில் சென்னைமவுண்ட் ரோடுபோன்றபிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மவுண்ட் ரோட்டில்நடப்பது போன்றுகதைக்களம் அமைந்துள்ளதாககூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் ராமோஜிராவ் பிலிம்ஸ்சிட்டியில் தொடங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் அஜித் இன்று விமானத்தின் மூலம் ஹைதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் ரசிகர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.