Advertisment

அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்; சர்ப்ரைஸ் கொடுக்கும் படக்குழு

ak61 movie first look release ajith birthday

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.இதனைத்தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்காக 20 கிலோவிற்குமேல் உடல்எடையை குறைத்துள்ளார்.'ஏகே 61' படத்திற்காகஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில் சென்னைமவுண்ட் ரோடுபோன்றபிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படப்பிடிப்புதொடங்கி நடைபெற்று வருகிறது.வங்கி கொள்ளையைச் சுற்றி திரைக்கதை அமைந்துள்ளதாகவும், முழு வீச்சில் படப்பிடிப்பை முடித்துதீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழுத் திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

இந்நிலையில் படம் குறித்ததகவல் ஒன்று வெளியாகியுள்ளது . அதன்படி, மே 1ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகும் எனக்கூறப்படுகிறது. வரும் மே 1ஆம் தேதி அஜித் தனது 51 வது பிறந்தநாளை முன்னிட்டு இதனைவெளியிட்டால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் பிறந்தநாள் விருந்தாக அமையும் எனப் படக்குழு திட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.

Advertisment

ACTOR AJITHKUMAR AK61 Boney kapoor
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe