மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் - அஜித் கூட்டணியில் கடந்த பொங்கலைமுன்னிட்டு வெளியான துணிவு படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. போனி கபூர் தயாரிப்பில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து,ஜிப்ரான் இசையமைத்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் இதுவரை இப்படத்தின் வசூல் விவரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள'ஏகே 62' படத்தில் நடிக்கவுள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்தில்வில்லனாக அரவிந்த்சாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானமும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின்படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகதிரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீப காலமாக அஜித்துடன் கூட்டணி அமைத்த இயக்குநர்கள் குறைந்தது அவருடன் மூன்று படங்களிலாவது பயணிக்கிறார்கள். அந்த வகையில் சிறுத்தை சிவா, ஹெச்.வினோத்தைதொடர்ந்து முதல் முறையாக அஜித்துடன் விக்னேஷ் சிவன்கூட்டணி வைத்துள்ளதால்இந்த கூட்டணி மீண்டும் தொடருமா என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் அடுத்ததாக அஜித் கூட்டணி அமைக்கவுள்ள இயக்குநர்களின்லிஸ்ட் வெளியானது. அந்த லிஸ்டில் அட்லீ, லோகேஷ் கனகராஜ், சிறுத்தை சிவா, விஷ்ணுவர்தன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
மேலும் அட்லீ இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகசமூக வலைத்தளங்களில் தீயாய் பரவ, அதை ரசிகர்கள் அதிகம் பகிரத்தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் இந்த தகவல் வெறும்வதந்தி தான் என்றுஉறுதியாகியுள்ளது. இது தொடர்பாக ஒரு ஆங்கில ஊடகம் அஜித்தின் செய்தித் தொடர்பாளரிடம் விசாரித்துள்ளதாகஅவர்கள் குறிப்பிட்டிருப்பது, "அட்லீ இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை. அது வெறும் வதந்தி தான்" என்றுள்ளது.