AK 62 Vignesh Sivan confirmed the new director to direct Ajith

Advertisment

மூன்றாவது முறையாக அ.வினோத் - அஜித் கூட்டணியில் வெளியான துணிவு படம் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து அஜித்தின் 'ஏகே 62' படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசையமைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதைத்தொடர்ந்து அரவிந்த்சாமியும் சந்தானமும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் சமீபத்தில் கூறப்பட்டது.

ஆனால் 'ஏகே 62' படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்றும் அதற்கு பதில் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்பதை அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது விக்னேஷ் சிவன், அவரது ட்விட்டர் பக்கத்தின் பயோவில் இருந்த ஏகே 62 என்பதை நீக்கியுள்ளார். மேலும் 'ஏகே 62' படம் கமிட்டானதை தொடர்ந்து அஜித்தின் புகைப்படத்தை கவர் பிக்சராக வைத்திருந்த விக்னேஷ் சிவன் தற்போது அதையும் நீக்கியிருக்கிறார்.

இதனால் 'ஏகே 62' படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்பதுஉறுதியான நிலையில் யார் இயக்குவார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்துள்ளதுகிட்டத்தட்ட உறுதி எனவும் அதை படக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.