Advertisment

ஏகே 62 - கமிட்டான இரண்டு பிரபலங்கள்; வெளியான லேட்டஸ்ட் தகவல்

ak 62 update

'துணிவு' படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசைமைப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அரவிந்த்சாமியும் சந்தானமும் இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.

Advertisment

ஆனால், சமீபத்தில் திடீரென சில காரணங்களால் விக்னேஷ் சிவன் இப்படத்திலிருந்து விலக, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவதாக திரை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், அதுவும் வெளியாகவில்லை. இயக்குநர் மாறியுள்ளதாகச் சொல்லப்பட்டதை அடுத்து இசையமைப்பாளரும் மாற்றப்பட்டதாக, அதாவது அனிருத்துக்கு பதில் சந்தோஷ் நாராயணன் கமிட்டாகியுள்ளதாகச் சொல்லப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் 'ஏகே 62' படம் குறித்த சுவாரசியத்தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நிரவ் ஷா ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இசையமைப்பாளராக எந்த மாற்றமும் இல்லாமல் அனிருத்தே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், படத்தின் பூஜை நேற்று நடைபெற்று முடிந்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே, விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா அஜித்தின் 'கிரீடம்', 'பில்லா', 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் வேதாளம், விவேகம் ஆகிய திரைப்படங்களில் அஜித்துடன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nirav Shah anirudh ACTOR AJITHKUMAR AK62
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe