Skip to main content

மீண்டும் வெளிநாடு செல்லும் அஜித்

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

ak 61 update - Ajith is going abroad again

 

'வலிமை' படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் 'ஏகே 61' படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதனைத்  தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். 

 

இந்நிலையில் 'ஏகே 61' படத்தின் படப்பிடிப்பிற்காக மீண்டும் அஜித் வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாங்காக்-கில் இப்படத்தின் படப்பிடிப்பு 3 வாரம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு முழுபடப்பிடிப்பையும் முடித்துவிட்டு சென்னை திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஸ்டராக மாறிய அஜித் - வீடியோ வைரல்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
ajith bike video latest

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடா முயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அஜர்பைஜானில் பல மாதங்கள் இப்படப்பிடிப்பு நடந்து வந்தது. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

சமீபத்தில், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்குச் செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதையடுத்து அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். ஜூன் முதல் படப்பிடிப்பு தொடங்கி 2025 பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ajith bike video latest

திரைப்படங்களைத் தாண்டி பைக் பிரியரான அஜித் ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், அஜித் மீண்டும் தனது பைக் டூர் பயணத்தை தொடங்கியுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இன்று அஜித், நடிகர் ஆரவ் உள்ளிட்ட சிலருக்கு பைக் ஓட்டும் நுணுக்கங்களை சொல்லி கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து, ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Next Story

பைக் ரைடா? பட ஷூட்டிங்கா? - அஜித் எடுத்த முடிவு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
ajith back to bike ride

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடா முயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அஜர்பைஜானில் பல மாதங்கள் இப்படப்பிடிப்பு நடந்து வந்தது. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

சமீபத்தில், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்குச் செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதையடுத்து அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். ஜூன் முதல் படப்பிடிப்பு தொடங்கி 2025 பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ajith back to bike ride

திரைப்படங்களைத் தாண்டி பைக் பிரியரான அஜித் ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தும் நடத்தி வருகிறார் அஜித். இந்த நிலையில், அஜித் மீண்டும் தனது பைக் டூர் பயணத்தை தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விடாமுயற்சியின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அஜித் அதில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பைக் சுற்றுலா பயணத்தை தொடங்கியிருப்பது, படப்பிடிப்பு இன்னும் தள்ளிப் போகவுள்ளதாகத் தெரிகிறது. படப்பிடிப்பு குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.