/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/195_6.jpg)
'வலிமை' படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் 'ஏகே 61' படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.
இந்நிலையில் 'ஏகே 61' படத்தின் படப்பிடிப்பிற்காக மீண்டும் அஜித் வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாங்காக்-கில் இப்படத்தின் படப்பிடிப்பு 3 வாரம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு முழுபடப்பிடிப்பையும் முடித்துவிட்டு சென்னை திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)