அஜித்துடன் நடிப்பதை உறுதி செய்த முன்னணி நடிகை

ak 61 movie manju warrier confirmed starring pairs ajith

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.இதனைத்தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்காக 20 கிலோவிற்குமேல் உடல்எடையை குறைத்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை வங்கி கொள்ளையை சுற்றி அமைந்துள்ளதாககூறப்படுகிறது. 'ஏகே 61' படத்திற்காகஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில் சென்னைமவுண்ட் ரோடுபோன்றபிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படப்பிடிப்புதொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அந்த தகவல் உறுதியாகியுள்ளது. சமீபத்திய பேட்டி இதனைஉறுதி செய்த மஞ்சு வாரியர் இது குறித்தஅறிவிப்பு சர்ப்ரைஸாக இருந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இவர்தமிழில் வெற்றிமாறன் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.விரைவில் ’ஏகே 61’ படம் குறித்த அறிவிப்புவெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ACTOR AJITHKUMAR AK61 manju warrier
இதையும் படியுங்கள்
Subscribe