ak 61 - ajith photos goes viral on internet

Advertisment

வலிமை படத்தைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் 'ஏகே 61' படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே தனது சொந்த காரணத்திற்காக குடும்பத்துடன் லண்டன் சென்ற திரும்பிய அவர், திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான 47வது துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் அஜித்தின் தற்போதைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகிவைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் 'ஏகே 61' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அஜித் சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் புறப்படும் போது சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாகதகவல் வெளியாகியுள்ளது. அதோடு இந்த படத்தின் படப்பிடிப்பு 30 நாட்கள் விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.