அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் வீரம். இந்த படம் அந்த வருட பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் ஜில்லா படத்துடன் வெளியானது. அஜித், விஜய் ஒரே நாளில் ரிலீஸ் செய்த கடைசி படங்கள் இதுதான். அதனை தொடர்ந்து ஒரே நாளில் ரிலீஸ் செய்யவில்லை. வீரம் ஹிட் அடித்ததை தொடர்ந்து தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் கட்டமராயுடு என்று வெளியானது.

Advertisment

vedalam

ஹிந்தியில் ரீமேக்காகும் மேலும் ஒரு அஜித் படம்! 

இந்நிலையில் ஹிந்தியிலும் இப்படத்தை எடுக்க ஆர்வம் காட்டினர். அதனை தொடர்ந்து பச்சன் பாண்டே என்று வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்கு தலைப்பு வைத்து ஷூட்டிங்கை தொடங்கியுள்ளனர். இதில் அஜித்தின் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கின்றார். இந்த வருட இறுதியில் வெளியாகுவதாக இருந்த பச்சன் பாண்டே படத்தை அமீர் கானின் லால் சிங் சட்டா படத்தின் ரிலீஸால் அடுத்த வருடத்திற்கு மாற்றியுள்ளது படக்குழு.

இந்நிலையில் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தையும் ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் விக்கி கவுசல் நடிக்க இருக்கிறார் என முதலில் தகவல் வெளியானது. ஆனால், தற்போது அஜித் கதாபாத்திரத்தில் ஜான் ஆபிரகாம் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் தங்கையாக நடித்த லக்‌ஷ்மி மேனன் கதாபாத்திரத்தில் ஹிந்தியில் நடிப்பதற்கு தேர்வு நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த படத்தை நடிகர் வருண் தவானின் அண்ணன் ரோஹித் தவான் இயக்குகிறார். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இந்திக்கு ஏற்றவாறு திரைக்கதையில் லேசான மாற்றங்கள் செய்து வருகிறார்கள்.