Advertisment

பைக் ரேஸ், கார் ரேஸ் வரிசையில் அஜித்தின் அடுத்த கேம்!

ajith

நடிகர் அஜித்குமார் சினிமா மட்டுமல்லாமல் விளையாட்டிலும் அதிக ஆர்வம் மிக்கவர். அதற்கு உதாரணமாக சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். இந்நிலையில் அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் 'விஸ்வாசம்' படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.இதற்கிடையே சமீபகாலமாக துப்பாக்கி சுடுவதில் அஜித் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். துப்பாக்கி சுடுவதற்கு முறையான பயிற்சியும் பெற்று வருகிறார். தொடர்ந்து இதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் அவர் விரைவில் அவர் மாநில, தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்க முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னொரு பக்கம் விஸ்வாசம் படத்துக்காக துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுகிறாரா...? அல்லது பைக், கார்பந்தயம் போல துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் கலந்துகொண்டு சாதனை படைக்க விரும்புகிறாரா...? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வருகிறது.

Advertisment
viswasam thala ajithkumar ajith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe