Advertisment

அஜித்தின் ஆதர்ச இயக்குனருடன் பிக்பாஸ் ஆரவ்... 

காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் என்று நான்கு படங்கள் அஜித்தை வைத்து இயக்கியவர் சரண். இவர் கடைசியாக ‘ஆயிரத்தில் இருவர்’என்றொரு படத்தை இயக்கி இருந்தார். நடிகர் வினய் நடித்திருந்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

Advertisment

arav

அடுத்து இயக்குனர் சரண் எந்த படத்தை இயக்கப்போகிறார் என்று எதிர்பார்த்த நிலையில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்று படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.

Advertisment

பிக்பாஸ் முதல் சீசனின் வெற்றியாளர் ஆரவ்தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் ராதிகா சரத்குமார், ஜோடியாக காவ்யா தாப்பர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். போஸ்டரில் ராதிகா சிகார் பிடிப்பது போன்று போஸ் கொடுக்கிறார். இதை போலவே அஜித்தின் அசல் பட போஸ்டரில் சிகார் பிடிப்பது போல போஸ் கொடுப்பார் அஜித்.

alt="devarattam" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="1dbcc8ac-bd96-44fa-9f8b-655bf8779855" height="169" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336-x-150-devarattam_21.jpg" width="378" />

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.சுரபி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

arav directorsaran radhika
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe