
மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில், 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது.

மேலும், இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அஜித் தன் டப்பிங் பணியை முடித்துள்ளார். இப்படத்தில் அனிருத் 'சில்லா சில்லா' என்ற பாடலைப் பாடியுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. தமிழகத்தில் உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். 'ஏகே 62' எனத் தற்காலிகமாக அழைக்கப்படும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
பொதுவாக, அஜித் எந்த சமூக வலைதளத்திலும் இல்லை என்றாலும் அவரது மேனஜர் சுரேஷ் சந்திராவின் ஐடி மூலமாக தனது படங்களின் அப்டேட், ரசிகர்களுக்கு அவர் சொல்ல விரும்புவது எனக் கூறி வருவார். அந்த வகையில் தற்போது ரசிகர்களுக்கு அறிவுரை எனும் வகையில் ஒரு கருத்தை அஜித் சொல்லியுள்ளதாக சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், "உங்களை சிறப்பாக செய்யத் தூண்டும் நபர்களை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு ட்ராமாவும் நெகட்டிவிட்டியும் வேண்டாம். பொறாமையோ வெறுப்புணர்வோ வேண்டாம். உயர்ந்த இலக்குடன் செயல்படுங்கள். உங்களில் சிறந்ததை ஒருவருக்கொருவர் வெளிக்கொண்டு வாருங்கள்." என ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் அஜித்.
pic.twitter.com/gt9iOY20z7— Suresh Chandra (@SureshChandraa) November 17, 2022