Advertisment

“என்னை பற்றி மற்றவர்கள் சொல்வதை அனுமதிக்க மாட்டேன்” - அஜித் குமார்

ajithkumar latest interview about cinema and car race

அஜித்குமார் கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலே அவர் நடிகக்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கதாநாயகியாக கே.ஜி.எஃப். நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

Advertisment

சினிமாவை தாண்டி கார் ரேஸில் ஆர்வம் உள்ள அஜித் முன்னதாக அதிலும் கவனம் செலுத்தி வந்தார். இடையில் எந்த கார் ரேஸ் போட்டியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஜனவரி முதல் கார் ரேஸில் அதிக தீவிரம் காட்டி வருகிறார். துபாய் ஆரம்பித்து போர்ச்சுக்கல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடக்கும் போட்டியில் தனது ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணி மூலம் கலந்து கொண்டு வருகிறார். இதில் சில போட்டிகளில் வெற்றியும் கண்டுள்ளார். போட்டிக்கு நடுவே அவ்வப்போது பேட்டிகளையும் தொடர்ச்சியாக கொடுத்து வருகிறார்.

Advertisment

அந்த வகையில் ஆட்டோ கார் இந்தியாவுக்கு அவர் கொடுத்த பேட்டியில் நிறைய விஷயங்களை பேசியுள்ளார். அப்போது அவரிடம் கார் விபத்துக்குள்ளாகி பிறகு மீண்டும் கார் ஓட்ட வரும் போது உங்களது மனநிலமை எப்படி இருக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அஜித், “என்னுடைய விபத்துகள் எல்லாம் ரொம்ப பெரியது. அதில் இருந்து மீண்டும் கார் ஓட்ட வருகிறேன் என்றால் நம்முடைய கமிட்மெண்ட் தான். அதையெல்லாம் பெரிதாக நான் சொல்ல விரும்பவில்லை. நான் என்ன நிலமையில் இருந்தாலும் கார் ரெடியாகிவிட்டால் நானும் ரெடியாகிவிடுவேன். என்னால் முடியவில்லை என தள்ளி போடமாட்டேன். அது தான் நான் மோட்டர் ஸ்போர்ட்ஸ் மீது நான் வைத்துள்ள கமிட்மெண்ட். அது போலத்தான் என்னுடைய படங்களுக்கும். ஸ்டண்ட் காட்சிகளின் போது எனக்கு காயங்கள் ஏற்பட்டாலும் ஷாட் ரெடி என்றால் திரும்பவும் போய் நடிப்பேன். அது என்னை ஒரு போதும் சினிமாவில் இருந்து வெளியேற வழிவகுக்காது.

நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய குடும்பத்தினர் திரைத்துறையில் இருந்ததில்லை. நான் ஒரு புதுமுக நடிகர். அதற்காக வெளியில் இருந்து வரும் நடிகர் என்று சொல்லமாட்டேன். எனக்கு வெளியில் இருந்து வரும் நடிகர், சினிமாவில் உள்ளிருக்கும் நடிகர், நெப்போட்டிசம்... போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை. எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்காக நிறைய விஷயங்களை செய்திருக்கேன். அவ்வளவுதான். முதலில் நான் நடிக்க வரும் போது என்னால் தமிழ் சரியாக பேச முடியவில்லை. என்னுடைய தமிழில் ஆங்கில சாயல் இருந்தது. ஆனால் என்னுடைய குறைகளை எல்லாம் சரி செய்ய நான் உழைத்தேன். அதற்கு கிடைத்த பலன் தான் நான் இங்கு இருக்கேன். அது போலத்தான் கார் ரேஸிங்கிலும். நிறைய ஏற்ற இரக்கங்கள் இருக்கும். இது போக பொதுவாகவே நான் தனிப்பட்ட முறையில் என்னை பற்றி மற்றவர்கள் சொல்வதை அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு சாதனையாளராக இருக்க விரும்புகிறேன். எனக்கான நேரம் வரும் போது திரும்பி பார்த்தால் நான் முயற்சி செய்ததை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்வேன்” என்றார்.

ACTOR AJITHKUMAR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe