நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் போணி கபூர் தயாரித்து வருகிறார்.

Advertisment

anoushka

இந்த படத்திற்கான பூஜை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே போடப்பட்டது. ஆனாலும், ஷூட்டிங் டிசம்பர் 10ஆம் தேதிதான் தொடங்கப்பட்டது. அதுவரையிலும் நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்தார். துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டு போட்டிகளிலும் கலந்துகொண்டார். அந்த வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

Advertisment

இந்நிலையில் அஜித்குமாரின் மகள் அனோஷ்கா தனது பள்ளி கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பாடிய ஆங்கில பாடல் வைரலாகி வருகிறது. இதேபோல முன்பு ஷாலினியுடன் அஜித்தின் மகன், மகள் இருவரும் எடுத்துக்கொண்ட செல்பியும் வைரலானது.