அஜித் குமார் சினிமா மட்டுமின்றி ரேஸிங், ஏரோ மாடலிங், விமானம் ஓட்டுவது என்று பல துறைகளிலும் திறம்பட செயல்பட்டு வருகிறார். துப்பாக்கி சுடுதல் போட்டிகளிலும் அப்போ அப்போ அஜித்குமார் கலந்துகொள்வார்.

Advertisment

ajith kumar

சமீபகாலமாகவே அஜித் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த வாரம் கோயம்புத்தூரில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டுள்ளார் அஜித்.

Advertisment

கடந்த 28ஆம் தேதி கோயம்புத்தூரில் 45வது தமிழ்நாடு ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியுள்ளது. இதில் அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர்கள் இதில் கலந்துகொண்டுள்ளார்கள். நடிகர் அஜித் குமாரும் தற்போது கலந்துகொண்டுள்ளார். வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை வெளியாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.