இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனங்களைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 'அஜித்தின் 61'படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் மோகன் லால் அல்லது நாகார்ஜூனாஇருவரில் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், இவர்களுடன் பாலிவுட் நடிகை தபுவும் மற்றும்பிக் பாஸ் புகழ் கவின் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக நடிகர் அஜித் 25 கிலோ எடை குறைக்க திட்டமிட்டு தற்போது 10 கிலோ வரை குறைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 'ஏகே 61' படத்தின் தலைப்பு குறித்ததகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி சமீபத்தில் அஜித் படங்களின்தலைப்பில் 'வி' சென்டிமென்ட் தொடர்ந்து வருகிறது. இதை பின்பற்றிஇப்படத்திற்கும் 'வல்லமை' என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 19 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டியில் தொடங்க உள்ளதாகவும், இதற்காகபிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும்சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.