/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/143_29.jpg)
கெளதம் மேனன் - அஜித் கூட்டணியில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் 'என்னை அறிந்தால்'. ஏ.எம். ரத்னம் தயாரித்திருந்த இப்படத்தில் த்ரிஷா, அருண் விஜய், அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியிலும் கௌதம் மேனனே இயக்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதற்கு முன்னதாக அஜித் நடித்த வீரம் படத்தை ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ என்ற தலைப்பில் இந்தியில் ரீமேக் செய்தார் சல்மான் கான். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் சல்மான்கான் ரசிகர்களைத்திருப்திப்படுத்தியது. வசூலிலும் நல்ல வரவேற்பு பெற்றதாகத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
கௌதம் மேனன், இதற்கு முன்னதாக அவர் இயக்கிய மின்னலே, விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களை இந்தியில் ரிமேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)