ajith wrote letter goes viral

Advertisment

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.இதனைத்தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்திற்காக நடிகர் அஜித் 25 கிலோ எடை குறைக்க திட்டமிட்டு தற்போது 10 கிலோ வரை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2 வதுவாரத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை விரைந்துமுடித்து தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நடிகர் அஜித் அண்மையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளாவிற்கு சென்றுள்ளார்.அங்கு சிகிச்சை பெற்ற அஜித் நேற்று அதிகாலை குருவாயூர் கோயிலுக்குசென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.

இந்நிலையில் தனக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உன்னிகிருஷ்ணன், கிருஷ்ணதாஸ் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் அஜித் கடிதம் எழுதியுள்ளார். நேற்று வெளியான புகைப்படங்கள் போலவே இந்த கடிதமும்சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.நடிகர் அஜித் ஏகே 61 படத்தை முடித்த பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.