/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/233_13.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன், என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகவுள்ள நிலையில் அதற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் லியோ படம் வெற்றி பெற ஓவியர் செல்வம் செய்துள்ளசெயல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அஜித்தின் புகைப்படம் இடம்பெற்ற ஒரு பேப்பரில், அதன் முனையை கொண்டு விஜய்யின் புகைப்படத்தை சுவரில் வரைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)