இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் படம் வலிமை. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங், பல கட்டங்களாக ஒவ்வொரு ஊர்களிலும் நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையில் சில காட்சிகளுக்கான ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

Advertisment

ajith boney

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரின் மனைவி ஸ்ரீதேவியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கடந்த ஃபிப் 24ஆம் தேதி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்று சென்னையிலுள்ள போனிகபூரின் வீட்டில் மறைந்த ஸ்ரீதேவிக்கு திதி கொடுக்கப்பட்டது. அதில் போனிகபூரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் அஜித்தும் கலந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

இதே வேளையில் சென்னை மீஞ்சூர் நெடுஞ்சாலையில் வலிமை படத்தின் பைக் சேஸிங் சீன் ஷூட்டிங் ஹெ.வினோத் இயக்கத்தில் நடைபெற்று வரும் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.