ajith vudaamuyarchi special poster

Advertisment

அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="871ed66c-2ae2-4f45-9893-3516d906cff3" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%281%29_22.jpg" />

பின்பு படப்பிடிப்பு தளத்தில் அஜித், கார் ஓட்டும் போது விபத்துக்குள்ளான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு மீண்டும் சில இடைவெளிக்குப் பிறகு, அஜர்பைஜானில் படப்பிடிப்பு தொடங்கியது. இதையடுத்து சண்டைக் காட்சிகளில் அஜித் நடிக்கும் வீடியோ ஒன்று வெளியானது. தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து சில நாட்கள் இடைவெளியில் வெளியானது. இதையடுத்து அஜர்பைஜானில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து அர்ஜூனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அஜித்குமார் திரைத்துறையில் 32ஆம் ஆண்டுகளைக் கடந்துள்ளார். அதைக் கொண்டாடும் விதமாக விடாமுயற்சியின் படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அஜித் ரத்தக்கறையுடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், “ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும்... யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே அஜித்தின் 32ஆம் ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாகத் திருச்சியில் அறம்மகிழ் முதியோர்கள் இல்லம் சார்பாகக் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.