தனியாய் வந்த விஜய்...தம்பதியாய் வந்த அஜித் !

பாராளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியது. 12 மாநிலங்களில் உள்ள 96 மக்களவை தொகுதிகளுக்கு தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 38 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

aj

காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதில் நடிகர் அஜித் காலையிலேயே தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் வாக்களித்தனர். அப்போது ரசிகர்கள் முண்டியடித்ததால் எதிர்பாராதவிதமாக சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நடிகர் விஜய்யும் காலையிலேயே நீலாங்கரையில் உள்ள பள்ளியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.

alt="k" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="db59de00-569d-4349-881a-00e66e4b87ac" height="204" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kanchana%203%20336x150%20resize_11.jpg" width="458" />

Lok Sabha election
இதையும் படியுங்கள்
Subscribe