‘மங்காத்தா 2’ வில் அஜித் - விஜய்; வெங்கட் பிரபுவின் புதிய ப்ளான்

ajith vijay act mankatha 2

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் மற்றும் அஜித், தனித்தனியே ஏராளமான ரசிகர்களை வைத்துள்ளனர். இவர்கள்இருவரும் இணைந்து கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்திருந்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதன் பிறகு இருவரும் தனித்தனியாகபடங்களில்நடித்து தற்போது முன்னணி நடிகர்களின் அந்தஸ்தில் உள்ளனர். இதனிடையே விஜய், அஜித் இருவரும் மீண்டும் எப்போது இணைந்து படம் நடிப்பார்கள்என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருவார்கள். அவ்வப்போது கோலிவுட் வட்டாரங்களில்இருவரையும் வைத்து படம் இயக்கவிருப்பதாக இயக்குநர்கள் மத்தியில் பேச்சு அடிபட்டு வரும். அதில் இயக்குநர் வெங்கட் பிரபு இருவரையும் வைத்து படம் இயக்க அதிக முனைப்பு காட்டி வருகிறார். சமீபத்தில் கூட இயக்குநர் வெங்கட் பிரபு விரைவில் இருவரையும் வைத்து படம் எடுக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறும்பட விழாவில் கலந்து கொண்டஇயக்குநர் வெங்கட் பிரபுவிடம்இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “ இருவரையும் ஒன்றாக திரையில் காட்ட வேண்டும் என்பது ஒரு ரசிகனாக எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. இது குறித்த எனதுவிருப்பத்தை அவரிகளிடமேசொல்லிவிட்டேன். அவர்களுக்கும்இதெபோன்ற ஆசை உள்ளது. ஆனால் எப்போது அந்த ஆசை நிறைவேறும் என்று உங்களை போல நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இரண்டு பேரும் ஓகே சொல்லிட்டாங்கன்னாகண்டிப்பா பெருசா ‘மங்காத்தா 2’ பண்ணிடலாம்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் வாரிசு படத்திலும், எச். வினோத் இயக்கத்தில் அஜித் துணிவு படத்திலும்நடித்து வருகின்றனர். இந்த இருபடங்களும்வரும் பொங்கள்அன்று வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

ACTOR AJITHKUMAR actor vijay venkat prabhu
இதையும் படியுங்கள்
Subscribe