களத்தில் இறங்கும் அஜித்தின் விடாமுயற்சி குழு

ajith vidamuyarchi update

அஜித் குமார், கடைசியாக 'துணிவு' படத்தில் நடித்திருந்த நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் விலக மகிழ் திருமேனி இயக்குநராக கமிட்டானார். 'விடாமுயற்சி' என படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக புனேவில் முதற்கட்ட படப்பிடிப்புதொடங்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ஹைதராபாத்தில் வருகிற ஆகஸ்ட் இறுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ACTOR AJITHKUMAR AK62 Magizh Thirumeni
இதையும் படியுங்கள்
Subscribe