/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/484_14.jpg)
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி படம் கடந்த 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா மற்றும் வில்லன்களாக அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அஜித்தின் 62வது படமாக உருவான நிலையில் நேற்று(06.02.2025) திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட சில பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இப்படத்தின் வசூல் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா எந்த ஒரு அப்டேட்டும் தற்போது வரை வெளியிடவில்லை.
இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் மார்ச் 3ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் ஸ்ட்ரீமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)