ajith used bikes in avm museum

தென்னிந்திய மொழிகளில் அனுபவம் வாய்ந்த புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருகிறது ஏ.வி.எம் ப்ரொடக்‌ஷன்ஸ். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 300 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளது. நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்ளிட்டோரை அறிமுகப்படுத்தியது.

Advertisment

சென்னை, வடபழனியில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் ஸ்டுடியோவில் ஏ.வி.எம். ஹெரிடேஜ் மியூசியத்தை உருவாக்கினர். இந்த மியூசியத்தில், உபயோகத்தில் இருந்த பழைய மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறிய திரைப்பட தயாரிப்பு தொழில்நுட்ப கருவிகளையும், மிகப் பழமையான பாரம்பரியமிக்க, கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் வைத்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் தற்போது திருப்பதி படத்தில் அஜித் பயன்படுத்திய (பஜாஜ் பல்சர் 180சிசி 2004) பைக்கை மியூசியத்தில் இணைத்துள்ளதாக அந்நிறுவனம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் திருப்பதி பட சமயத்தில் அந்த பைக்குடன் அஜித் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. திருப்பதி படத்தை ஏவிஎம் ப்ரொடக்‌ஷன் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment